உன்னை கண்ட முதல்முறை முதல்
இன்று வரை, உன் மேல் நான் கொண்ட
காதலுக்கு இல்லை தேய்பிறை...
பகலில் உன்னைக்காண விழிகள் ஏங்கும்..
முன்னிரவில் உன் நினைவால்
தூங்கா என் விழிகள்
பின்னிரவில் தூங்கும்
உன்னைக் கனவில் காண..
என் காதலை மறுத்தால்..,
வலி தாங்கும் என் இதயம் - தாங்காது
நீ என் காதலை வெறுத்தால்...
பூவே! உன் வாசம் நுகர்ந்த எனக்கு..,
நீ என்னவளாகும் வாய்ப்பு கிட்டப்போவதில்லை..!
எனக்காக பிறந்தவள் நீ என்று எண்ணினேன்..,
பெண்ணே நீ எட்டாக்கனி....
காதல் கொண்ட மனது
நட்பாய் வேஷமிட மறுக்கிறதே..
நம் பிரிவை எதிர்ப்பார்த்து
மனம் தவியாய் தவிக்கிறதே!
நாம் சேரும் காலம் அமையப்போவதில்லை
நாம் பிரியும் காலம் தொலையப்போவதில்லை
உன் மேல் நான் கொண்ட
காதல் என்றென்றும் அழியப்போவதில்லை
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment