JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Saturday, August 27, 2011

உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்..
என் மீசை புருவத்தை
முறுக்கும் போது
உன் அழகை வாய் முழித்துப் பார்க்கும்..
எச்சில்கூட வேர்வையாகும்..
உன் பிரிவில் நாக்கு நரைத்து விடும்
பற்கள் தாடி வளர்க்கும்..
நீ சிரிக்கும் தருணத்தில்
இதயம் நரம்புகளை தன் வசமாகும்
நீ தலை வருடும் போது
மூளை “லப்-டப்” என துடிக்கும்.
                                       என்றும்ன்புடன்+++**Santhosh**+++

மறக்கத் தெரியவில்லை
என் மனதிற்கு
உன்னை - என் நினைவுகளை
நம் காதலை
உன்னுடன் பழகிய நாட்களில்
பேசிய வார்த்தைகள்
ஓயாது ஒலிக்கிறது
என் காதுகளில்
ஒவ்வொரு நொடியும்
எண்ணிப்பார்க்க முடியவில்லை
ஏன் நாம் பிரிந்தோமென்று..
 உன்னுடைய தவறை மன்னிக்க
என்னால் முடிந்திருப்பினும்
என்னிடமே என்னை
ஏமாற்றப் பிடிக்கவில்லை
ஏனெனில்
என் இதயத்தின் வலி தெரியும் எனக்கு
உன்னிடம் நான் எதிர்பார்த்தது
அன்பு மட்டுமே
உன்னை நான் நேசித்தது போல,
என்னில் நீ வாழ்ந்தது போல,
உன்னில் நான் வாழ வேண்டும்
என்று மட்டுமே விரும்பினேன்
இன்று உன்னை பிரிந்தும் கூட
என் காதல் என்னை வதைக்கிறது
உன்னிடமே திரும்பத் துடிக்கிறேன்
இருப்பினும்
என் மனதிற்குள் ஏனோ பயம்
எங்கே மறுபடியும் என்னை
நீ காயப்படுத்தி விடுவாயோ என்று
அதனால் தான்
இன்றும்
தொடர்கிறது என் பயணம்
உன் நினைவுகளுடன்..                                                    என்றும்ன்புடன்+++**Santhosh**+++

Friday, August 26, 2011

நகரும் ஒவ்வொரு நொடியும்..
உன் நினைவுகளுடனே.
தேடும் என் இரு விழிகளும் என்றும்
உன் அழகிய உருவத்தையே***
நீ இன்று, நாளை, நாளை மறு நாள்
வாருவாயென தவிக்கிறது மனசு
பாவம் மனம் அதுக்கு தெரியவில்லை..
கனவில் கூட கரைசேர முடியாத
காகிதக்கப்பல் நான் என்று..*&*                                                  என்றும்ன்புடன்+++**Santhosh**+++
சின்ன சின்ன ஆசைகளைஎன்னுள் வளர்த்து
உன்னோடு இருக்கும்போது அவைகளை 
சிறகுகளாக விரித்து பறக்கலாமென்று காத்திருந்தேன்
ஆனால் நீயில்லாத சிறகுகள் விரிக்காமல் சுருங்கி 
என் மீது சுமையாக என்னால் தாங்காமல் 
என்னுடல் இளைத்து கண்ணீரை வியர்நீராக சொரிந்து 
ஏது வாழ்க்கை இதுதான் வாழ்க்கையா என்றுனர்வில்லாமல் 
ஐடமாய் எங்கே என் வாழ்க்கையென்று தேடுகிறேன்...
                                                    என்றும்ன்புடன்+++**Santhosh**+++
உதிரும் பொழுதுகளை
பசுமை நினைவுகளோடு
உயிர்ப்பித்து மறைந்தவளே
உன் தரிசனம் எப்போது..
கபடமற்ற உள்ளத்திற்கு
காதலை காவலனாக்கி
பூட்டிவைத்துச் சென்றாயே
விடுதலையும் தாராயோ                                                                     என்றும்ன்புடன்+++**Santhosh**+++
நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்னை விட்டு பிரிஜாது
உன் அன்பு முகம் தினமும்
வந்து போகும் என் கண்களில் ...
உன்னோடு கதைத்த நிமிடங்கள் 
மறக்காத என் இனிச நினைவுகள்..
என் இதஜத்தில் என்றும் நீ இருப்பாய்
என் உஜிராக
உன் உறவு மட்டும் போதும் இந்த உலகில் வாழ
என்னிடம் இருந்து
நீ பிரிந்து விட்டாலும் உன்னை விட்டு
உன் நினைவை விட்டு என்னால் வாழ முடிஜவில்லை...
என்றும் என்னுள் நீ இருப்பாய் என் உஜிராக
.

                                                     என்றும்ன்புடன்+++**Santhosh**+++
உள்ளத்தின் வலியை உணர்வால் விவரிக்க முடியும் வார்த்தைகளால் முடியாது.
சொல்ல வந்த வார்த்தைகள் நழுவிச்செல்ல வார்த்தைகள் மௌனித்து நிற்கும் தருணம் 
உன் பிரிவு இதையும் தாங்க முடியுமா? 
என் இதயம் காலங்கள் எவ்வளவு தூரம் சென்று விட்டன. 
நாமை தாண்டி இனியும் வேண்டுமா இந்த வாழ்க்கை
 மௌனித்து செல்கிறேன் உன்னை விட்டு மௌனித்த என் போலி இதயத்துடன் 


                                                என்றும்ன்புடன்+++**Santhosh**+++
அன்பே !
மழைக்கால குடைக் காளானாக...
உன் மனம் இருப்பது புரியாமல்-
நான் உன் இதயவறையில் குடியேற விரும்பி,
இமைமூடி உன் நினைவுகளை
இதமாக
இரைமீட்டுக்கொண்டிருந்த வேளையில்,
நீயோஎன் அன்புக்கு இறுதியுரையை
இரக்கமின்றி எழுதிவிட்டுச்செல்ல
நானோ
உன் பாதச்சுவடுகளில் -என்
பார்வையைப் பதித்தபடியே பயணிக்கின்றேன்
எனக்கானஉன் இறுதி வரியை எதிர்பார்த்து..

                             

                                                     என்றும்ன்புடன்+++**Santhosh**+++
உன் கண்கள் மூடித் திறக்கும் ஒவ்வோர் கணமும்
என் நெஞ்சக்கனல்களில் ஏதோ பரிதவிப்பு
உன் சுவாசக் காற்று என்னை தீண்டுகையில்
என்னுள் ஏனோ இனம்புரியாத சிலிர்ப்பு
காதலெனும் ஊடலிலும் கூடல் கணக்கிலும்
செய் கூலிக்கு எப்படியிங்கு சேதாரத்தால் ....??
ஓ காதல் என்னும் களிப்பான ஆட்டத்தில்
தோற்றவரே.......வென்றவரோ ?

                                                     

                                                       என்றும்ன்புடன்+++**Santhosh**+++

உன்னை அன்று
பார்க்காது இருந்திருந்தால்
உன்னோடு அப்போது
பேசாது விட்டிருந்தால்
எம் உள்ளங்கள் இடம் மாற
இறுமாப்புச்செய்திருந்தால்
உணர்வுகள் ஒன்றையொன்று
புரியாது போயிருந்தால்
பார்வைகளால் பாசமதை
பரிமாற மறுத்திருந்தால்
காமன் கணைகள்அவை
வலுவிழந்து வீழ்ந்திருக்கும்
காதலர் தினமேஎன்றும்
களையிழந்து போயிருக்கும்
கண்களுக்குள் எம்காதல்
கருச்சிதைவு அடைந்திருக்கும் 
காலமெல்லாம் கண்ணீர்தான்
காவியமாய் ஆயிருக்கும்                                                  என்றும்ன்புடன்+++**Santhosh**+++
எனக்கு விக்கல் வரும் போது
நீ என்னை நினைப்பதாய் நினைக்கிறேன்,
தனிமை சிரிப்பு, தனிமை பொலம்பல் என
தினமொரு நாடகம் இனிமையாய் அரகேற்றினேன்,
உன் நினைவுகளை நினைக்கையில்
திறந்தவாய்  மூடாமல் இருக்கிறேன்,
நீ அணியும் ஆடைகளை என்
மேனி கொண்டு நெய்கிறேன்,
உன் மெத்தை மடி சாய்கிறேன் ,
வெக்கத்தில் உன் இமை கொடுக்கும் தாளத்திற்கு
இதயம் பக்கத்தில் பாடல் வடிக்கிறேன்,
என் உதடுகளால் உன் மேனியை நகல் எடுக்கிறேன்,
என் விழிகளிலே  அதை மாட்டி வைக்கிறேன்,
உன்னை தள்ளிவைத்தே ரசிக்கிறேன்,
மனதை கள்ளிச்செடியில் புதைக்கிறேன்,
உன்னுடன் பேசிய வார்த்தைகளை சேகரிக்கிறேன்,
நீ கேட்கும் பாடல்களை ரசிக்கிறேன்,
மடல் ஒன்றை எடுக்கிறேன்,
ஊடல் கொஞ்சத்தை சேர்க்கிறேன்,
விளையாடல் மஞ்சத்தில் கலக்கிறேன்,
தேடல் தீரும் வரை தொடர்வதற்கு....

                                                        என்றும்ன்புடன்+++**Santhosh**+++