JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Saturday, July 2, 2011

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள்! பகுதி 1

முதல்லே இது தேவையானு யோசிச்சேன். ஏற்கெனவே பலரும் ராமாயணத்தைப் பலவிதங்களிலும் அலசியாச்சு. இன்னமும் பேசப் பட்டும் வருகின்றது. எப்போது எழுதப் பட்டது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு காவியம் இன்றளவும் வாதப் பிரதிவாதங்களால் ஈர்க்கப் படுகின்றது, கற்றறிந்த பலரையும். ஆனால் பலருக்கும், தெரிஞ்ச கதையான ராமாயணத்தைத் திரும்பவும் எதுக்குப் படிக்கணும் என்ற கேள்வி வருகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதைப் படிக்கவும் வாசகர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை என்றும் தெரிய வந்தது. பரவலாக, அநேகமாய் உலகம் முழுதும் ராமாயணம் என்றொரு இந்திய இதிகாசம் பற்றி அறிந்திருந்தாலும், அப்படி என்னதான் இருக்கின்றது இதில்?? ஏன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் படுகின்றது?? இந்திய மக்கள் தங்கள் மனம் கவர்ந்த கதையாக, தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தக் காவியத்தை ஏன் நினைக்கவேண்டும்??

மேற்கத்திய அறிஞர்கள் இதை இந்தியாவின் மாபெரும் காவியங்களில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதுவே முதன்மையானது என்றும் ஒப்புக் கொள்கின்றனர். முக்கியமாய்க் குழந்தைகளுக்குப் படுக்கும் நேரம் சொல்லப் படும் கதையாக இது இருந்து வருகின்றது. மேற்கத்திய நாடுகளின் தேவதைக் கதைகளைப் பெருமளவில் ஒத்து இருந்தாலும், அதிலிருந்தும் மாறுபட்டும் வருகின்றது என்று சொல்லலாம். ஆனால் தேவதைக் கதைகளில் பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகியை அடைய மிகவும் கஷ்டப் பட்டும், பலவிதத் தடைகளை வென்றும், கடைசியில் கதாநாயகி இருக்கும் இடத்தைக் கஷ்டப் பட்டு கண்டு பிடித்தும் அடைவான். வழியில் அவனுக்குப் பல மிருகங்களும், தேவதைகளும் உதவி செய்யும். 

அது போலவே இந்தக் காவியத்திலும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்கள் பல இருக்கின்றன. ஒரு மாற்றம் என்னவெனில் இதில் கதாநாயகன் திருமணம் புரிந்த பின்னரே மனைவியைப் பிரிகின்றான். இங்கேயும் காடுகள் வருகின்றன. நதிகள், மலைகள் வருகின்றன. சமுத்திரம் வருகின்றது. கதாநாயகனின் வீர, தீரப் பிரதாபங்களும், அவனின் எதிரியின் சாமர்த்தியங்களும், அவனின் வீரமும் பேசப் படுகின்றது. அத்தோடு இல்லாமல் கதாநாயகன் தன் எதிரியான அரக்கனைச் சென்றடைய அவனுக்குப் பலவிதங்களிலும் உதவி கிட்டுகின்றது. முதலில் பறவையான ஜடாயு. பேசும் பறவை. அதன் பின்னர் வானரங்கள், இவையும் பேசுகின்றன. கரடியான ஜாம்பவான். இதுவும் மனிதர்கள் போல் பேசுகின்றது. இவற்றின் உதவியோடு ஒரு மாபெரும்பாலம் கட்டி சமுத்திரத்தைக் கடக்கின்றான் கதாநாயகன். 

அதிலும் இந்த வானரங்கள் நினைத்தபோது நினைத்த உருவத்தை எடுக்கும் வல்லமை பெற்றிருக்கின்றார்கள். அதே போல் அரக்கர்களும் பல்வேறுவிதமான வடிவை எடுக்கின்றார்கள். இதற்கு மாரீசன் பொன்மானாய் மாறியதும், தூது வரும் அரக்கர்கள் பறவை வடிவில் வருவதும், மற்றொரு சமயம் வானரங்கள் போலவே உருமாறிச் சென்று உளவு பார்ப்பதும், இந்திரஜித் என்ற ராவணனின் மகன் மறைந்திருந்து மாயாஜால முறையில் போர் புரிவதும், குழந்தைகளுக்குக் கேட்கக் கேட்கத் திகட்டாத ஒன்றாய் அமையும். கதை சொல்லப் படும் உத்திக்கு இத்தகைய பாத்திரங்களின் தேவை இருக்கின்றது மட்டுமில்லாமல் கடைசிவரையில் அவை கதாநாயகனுக்குத் துணை புரிந்து அவன் வெற்றியடையவும் உதவுகின்றன. தேவதைக் கதைகளில் எவராலும் வெல்லமுடியாத ஒரு மந்திரவாதியை கதாநாயகன் எவ்வாறு மந்திர வல்லமை பெற்றிருக்கும் கிளிகள், பறவைகள், மிருகங்கள், உதவியுடன் வெற்றி கொண்டு தன்னுடைய அரசையும், அரசகுமாரியையும் கைப்பற்றுவானோ, அவ்வாறே இதிலும் கதாநாயகன் வானரங்களின் உதவியோடு ராவணன் என்ற எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனைக் கொன்று, தன் மனைவியை மீட்டுக் கொள்கின்றான்.

அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவையான நீதி போதனையும் கிடைக்கின்றது. தன் தந்தையின் வாக்கைக் காக்கவேண்டி ராமன் காட்டுக்குச் சென்றது குழந்தைகளுக்குப் பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் போதித்தால், காட்டில் ரிஷி, முனிவர்களுக்கு ராமன் உதவியது, பலம் பொருந்தியவர்கள், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல், ஒரு அரசகுமாரனின் கடமை தன் மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பதும் என்றும் சுட்டுகின்றது. மேலும் கடவுளுக்கு நிகரான பலம் பொருந்திய எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனை, ராமன் என்ற சாதாரண மனிதன் கொன்றான் என்பதும் குழந்தைகளைக் கவரும். அதே சமயம் ராவணனை வெல்ல முடிந்தது எவ்வாறு என்பதும் சொல்லப் படுவதால், ராவணன் எத்தனை வரம் வாங்கி இருந்தாலும், மனிதர்களைச் சாதாரணமாய் நினைத்தது மட்டுமில்லாமல், அடுத்தவர் மனைவியான சீதையைத் தூக்கி வந்த அராஜகச் செயலினால் அவன் பலம் பொருந்தியவனாய் இருந்தாலும், அவனின் பலம் முழுதும் பயனற்றுப் போய் விடுகின்றது. இதிலிருந்து ஒழுக்கம் தவறக் கூடாது என்ற நீதியும் குழந்தைகளைச் சென்றடைகின்றது. 

ராவணன் என்ற அரக்கன், மனிதர்களை மட்டுமின்றி, குரங்குகள், மிருகங்கள், கரடிகள் போன்றவற்றையும் ஒரு பொருட்டாய்க் கருதாமல் இருக்கும் அதே சமயம் ராமன் தன் அன்பினாலும், பண்பினாலும், நட்பினாலும் அவற்றைக் கவர்ந்து தம் வசம் இழுக்கின்றார். ஒரு வானர அரசன் ஆன சுக்ரீவனிடம் நட்புப் பாராட்டுகின்றார். குழந்தைகளின் மனதில் ஆழப் பதியக் கூடிய ஒரு விஷயம் மிருகவதை என்பதும், மிருகங்களை இம்சை செய்வது தவறு என்று தோன்றும். மேலும் ஒரு அரசன் எவ்வாறு நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவேண்டும் என்பதும் இதில் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டிருப்பது வருங்காலத் தலைமுறைக்குத் தெரியவேண்டிய முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இப்படி பலவகைகளிலும் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைக் கொண்டிருப்பதாலேயே ராமாயணம் இன்றளவும் குழந்தைகள் மத்தியில் மிக, மிகப் பிரபலமான ஒன்றாய் இருந்து வருகின்றது.

TV Shows: Ramayanam 20-02-2011 - Sun TV ராமாயணம்

TV Shows: Ramayanam 20-02-2011 - Sun TV ராமாயணம்: "Watch Ramayanam 20-February-2011 - Sun TV ராமாயணம் Online @ Spottamil Entertainment Source 1 Source 2"
எதையும் தாங்கும் இதயம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் 

மெழுகு போன்று உதிர்ந்த விம்பம்
கண்ணிமைகளின் பாரத்தில்
அழுத்தும் நிமிடங்கள்
என்னிடம் தோன்றாத
மாற்றங்கள் எத்தனையோ

பேச நினைக்கும் நேரத்தில்
முறிந்து போகும்
தோழமை உறவுகள் எத்தனையோ

எதிர்பார்ப்புக்கள் ஏதும்
தோன்றாத வேளையில்
கை கொடுக்கும்
வெற்றிக் கனவுகள்
இப்படி எத்தனையோ

உணர்வுகள் என்னிடத்தில்
பகிந்து கொள்ள முடியாத
நினைவுகள் எத்தனையோ-ஆனால்
நீ என்னிடத்தில் இல்லை
இப்போது என்னவேலோ எப்போதோ

இந்த கவிதையினை
நீ கையில் எடுத்து படிக்கும் போது
தம்மால் நினைத்துக் கொள் என்னை?

ஒரு துளி கண்ணீரில்
நிறைந்து இருப்பேன்
காற்றில் அது கலையும் முன்
என் நினைவுகள்
உன்னுள் கலந்து இருக்கும்
என்பதை நீ ஒப்பு கொள்வீரா

அதுதான் உண்மை நீ அறிந்து கொள்
உன் பிரிவின் வலியை தாங்க முடியாமல்
உன்னை சந்திக்கும் நாளுக்காக
நான் இரவு பகலாய்
தவம் கிடக்கின்றேன் நீ அறிவாயா?

சந்தித்து பிரியும் போதுதான்
தோன்றும் வேதனையின் சுகம்
அதை நீ அறிவீரா?

பழகி விட்ட பாச வலியை
தாங்க முடியாமல்
வேதனையில் தவிக்கின்றேன்

அம்பு பட்டு துளைத்தால்
புண் தீர்ந்து விடும்
எனக்கு பட்டதோ அன்பு
சொல்லத் துடிக்கின்றேன்

கருணை என்ற ஒன்று
உனக்கு இருந்தால்
இந்த பிரிவினை
இன்றே மாற்றி விடு

இப்பிறவியில் இல்லை என்றால்
எப்பிறவியிலும் நீயும் தேவை இல்லை

எனது வார்த்தைகள்
விம்பம் போன்று
உயிர் ஊட்ட முடியாத
வார்த்தைகள் எத்தனையோ
எனக்குள் செத்து கிடக்கின்றது
அது எனக்குள் சமாதியாகட்டும் 




வலி பெற்ற மொட்டு
பூவாய் மலரும்
உளி கொடுத்த வலியில்
சிலையும் சிரிக்கும்
வலி இல்லா வாழ்க்கை
வையத்தில் இல்லை
கலி என்றில்லை இது
காலத்தின் உண்மை
மனதின் வலியில்
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?
வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??
வலிக்கு வாழ்க்கைப் பட்ட
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??
வலிக்கு வலி வரும் நேரம்
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை

Thursday, June 30, 2011

பிடிப்பில்லை
பொறுப்பில்லை
வெறுப்பைக்
குத்தகைக்கு எடுத்திருப்பதாய்
குற்றச்சாட்டுகள் நீட்டமாய் !

சிலுவை இரத்தம்
தேடும் மனிதர்களாய்
ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு
நேர்மையாய்
மறுகன்னம் காட்டினாலும்
கை நீட்டி
அடிக்க முனையும் இவர்கள் !

பொய் சொல்லி
கழுத்தறுத்து
சூதின் நாக்குகளைச் சுழற்றியபடியே
வெள்ளாடுகளை
வெட்டியும் தின்றும்
குருதிக் குளியளில்
ஆவி பிடித்தும்
ஒன்றை இரண்டாக்கியும்
நாலைத் துண்டாக்கியும் தின்னும்
மானிட மிருகங்களாய் இவர்கள் !

கவனியுங்கள்.....
கரு நுழைந்து
கொஞ்சும் குழந்தையின்
பிஞ்சு விரல் பிடித்து விளையாடும்
கடவுளாய் நான்!!!

Wednesday, June 29, 2011

சந்தோஷம் எல்லோருக்கும் வரும்
வசந்தம் வாசவ் வரை வந்தும் உள்ளே வரவில்லை
எனக்குள்ளேயும் வரவில்லை...
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை
தோல்விகள் எதும் புதிது இல்லை
தோற்பதில் பயமும் இல்லை...
நம்பிக்கை மட்டும் மனதில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்
காலம் பதில் சொல்லும் காத்திருப்பதன் அர்த்தத்தை மரணத்திற்கு............

Tuesday, June 28, 2011

பாசத்துக்காய் ஏங்கும் நெஞ்சம்
உயிர் மட்டும் இருக்க
உணர்வுகள் செத்துப்போயின...


கதறி ஆழ 
துடிக்குது மனது
கண்ணீர் மட்டும்
வரவில்லை...


கனவிலும் நினைக்காத நரகம்
இந்த தனிமை
தனிமையில்
சந்தோஷமாய் இருந்தேன்
சிலகாலம்.........


இன்று தனிமையின்
 வெறுமை சுடுகிறது.
என் உள்ளத்தை....


இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தை நோக்கி
என் கரம்
ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்


தலை கோதி வறுட உன்கரம் வேண்டும்
தோள் சாய உன் தோள் கொடு 
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
துங்கி கொள்கிறேன்


உன் அன்பால் மட்டுமே
உயிர் வாழ்கிறேன்
உறவே என்றும்
எனக்கு மட்டுமே உறவாய் இரு
கடந்த காலம் கசப்பாய் கடந்து விட
நிகழ்காலம் நெருப்பாய் சுட்டு விட
எதிர்காலம் கவலையில் கலங்கி விட
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட


ஆதரவாய் ஆறுதல் வார்த்தைகள் பேசி
என் கிறுக்கல்களையும் ரசித்து
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து 
என் துயர் மாறா செய்யும் என் உறவே..


என் நட்பு தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே
உன் நட்பில் துயர் மறைக்கிறேன்
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்


துயர் துடைக்கும் உன் கரங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்
என் உறவே
எனக்கு மட்டும்
உன் அன்பை தந்து விடு
பாசத்தை பகிர்ந்து தருவது அன்னையாக
 மட்டுமே இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேண்டும்..........
கடந்த காலம் கசப்பாய் கடந்து விட
நிகழ்காலம் நெருப்பாய் சுட்டு விட
எதிர்காலம் கவலையில் கலங்கி விட
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட


ஆதரவாய் ஆறுதல் வார்த்தைகள் பேசி
என் கிறுக்கல்களையும் ரசித்து
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து 
என் துயர் மாறா செய்யும் என் உறவே..


என் நட்பு தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே
உன் நட்பில் துயர் மறைக்கிறேன்
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்


துயர் துடைக்கும் உன் கரங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்
என் உறவே
எனக்கு மட்டும்
உன் அன்பை தந்து விடு
பாசத்தை பகிர்ந்து தருவது அன்னையாக
 மட்டுமே இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேண்டும்..........

Sunday, June 26, 2011

என்னுள் ஏமாற்றம்





உன்னுள் மாற்றம்
என்னுள் ஏமாற்றம்
இன்றும்ஓரே மனநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறி விட்டாய்???

பாசத்திற்கு அளவில்லைஅன்று
பாசமே இல்லாததை போல் உணர்கிறேன் 
இன்று...
தனிமையில் தவிப்பதாய் ஓரு கலக்கம்.
தினமும் துங்க வைப்பாய் உன் sms இல்
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை
என்னுடனே இருக்க துடிப்பாய் பிரிய மனமின்றி...
இன்று???

நேரம் இல்லையோ என்னை நினைக்க கூட
தினமும் பிரிகிறேன் உன் அன்புக்கான ஏமாற்றத்தோடு..
அமைதியாய் இருந்தேன்என்னுள் அமைதி இல்லை..
பேசுவதைக்கூட குறைத்துமீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரி தவிக்குது உன்னால்...

எனக்கே எனக்கு என்றுஉன்னை 
நினைத்தாதுதான் என் பிழையோ?
யாரிடமும் விட்டுக்கொடுக்கமனம் இல்லை...
ஏன்னை மட்டும் ஏன் விட்டாய் ஏன்?
பிரிவு எல்லோருக்கும் வரும்...
பின்னாளில் பிரியப்போவதற்கு இன்னாளில் ஓத்திகை ஏன்?????.....