JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Tuesday, March 15, 2011

எந்த ஒரு பொருளையும் உபயோகிக்காமல் இருந்தால் அதனால் பயனில்லை.அதைப்போல முந்தைய பதிவில் பதிவிட்ட ஸ்டைலை எவ்வாறு போட்டோஷாப்பில் இணைப்பது என்று பார்க்கலாம்.முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலது மூலையில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்யவும். உடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Load Styles கிளிக் செய்யவும்.


உங்கள் ஹார்ட்டிஸ்கிலிருந்து நீங்கள் சேமித்துவைத்துள்ள Style-ஐ தேர்வு செய்யுங்கள்.இப்போது புதிய விண்டோ திறந்துகொண்டு அதில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள ஸ்டைல் கட்டத்தில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்ய உங்கள் எழுத்துக்களானது விதவிதமான நிறம்மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதனைப்போலவே அனைத்து ஸ்டைலையும் நாம் பயன்படுத்திப்பார்க்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment