JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Monday, April 11, 2011

என் கவிதைக்கான உன் பாராட்டு

                                                                 எது காதல்இதுவரை இன்னும் புரியவில்லை.
எது காதல் உன் கண்களுக்குள் உலகத்தை
பார்த்திருக்க வேண்டும் என்ற போதைதான் காதலா
நீ மெதுவாக சிரிக்கும் அந்தபுன்னகைக்காக ஏங்கி ஏங்கிக் கிடப்பதுதான் காதலா

கடிகாரம் மறந்து காலநேரம் துறந்து
உன்னுடன் கதைத்துக்கொண்டே கரைவதுதான் காதலா
உனக்குத் தரும் சின்னச்சின்னப்பரிசுகளிலும்,
நீ எனக்கு கொடுக்கும் அன்புப் பரிசுகளிலும் உறைந்து கிடக்கிறதா காதல்

                                                   அப்படியாயின் எதுதான் காதல்..
                             என்னைச் செதுக்கி செதுக்கி ஒரு     மனிதனாய் மாற்றுகிறாயே
         அதுதான் காதல் எனக்கு ஒரு போதிமரமாய் இன்னுமொரு                                      கீதை என நான் தடுமாறும் குருசேத்திரங்களில்   
என் தலைகோதி எனக்கு நீசொல்லும் அறிவுரைகளில்தான் காதல்
நிரம்பிஇருப்பதாய் எனக்குபடுகிறது.சொற்ப நொடியிலே
சொற்பனம் கண்டேன் அந்த நொடியிலே
சோகம் தந்தாய் சொந்த வரியில்
சோகம் தீர்த்தேன் சொல்ல முடியாமல்
ராத்திரியில் துடித்தேன் விலகி விலகிப் போகின்றது
உணர்வுகள் விலக்கியும் போகாது நம்

நினைவுகள். பிளவுகள் ஒன்றாய்
இணைகையிலே பிரிவுகள் என்றும்
துயரமில்லை மின்னல் ஒளியாய்
வருவதெல்லாம் வெண்ணிலவாய் நிலைப்பதில்லை.
பிரியமான வேளையிலே

பிரிவுகள் வந்து சேர்கின்றது பிரியத்தான் முடியாமல்
பிரிகின்றேன் உன்னை ...எங்கு வாழ்ந்தாலும்
எப்படி வாழ்ந்தாலும் வாழ்ந்தால் உன்னோடுதானென்று திடம்கொண்டிருந்தேன் திடமாய்
அறிந்திருக்கவில்லை திடமாய் பிரிவோமென்றுசின்ன சின்ன ஆசைகளைஎன்னுள் வளர்த்து உன்னோடு இருக்கும்போது அவைகளை சிறகுகளாக விரித்து பறக்கலாமென்று காத்திருந்தேன் ஆனால் நீயில்லாத சிறகுகள் விரிக்காமல் சுருங்கி என் மீது சுமையாக என்னால் தாங்காமல் என்னுடல் இளைத்து கண்ணீரை வியர்நீராக சொரிந்து ஏது வாழ்க்கை இதுதான் வாழ்க்கையா என்றுனர்வில்லாமல் ஐடமாய் எங்கே என் வாழ்க்கையென்று தேடுகிறேன்...

முதல் நாளில் நீமுதல் நாளில் நீ பேசியமுதல் வார்த்தை இரண்டாம் நாளில் உன்னை என் இதயம் தேடியதை இறுதியாய் என்னை விட்டு போய் விடு என்றதை எதையும் மறவேன் அன்பே மறக்கவும் முடியாதுவாழ்கை பயணத்தில் வாழ்கை பயணத்தில் நான் இளைப்பற எனக்காக கொஞ்ச நாள் கடவுள் அனுப்பிய ஒருத்தன் தான் நீ உன் வேல முடிஞ்சு நீ போய்ட்ட வாழ்கை முழுதும் அழுவது நான் கடவுளுக்கென்ன இப்போ உன் நினைவு என் அருகில் இருந்து என்னை பாக்கிறது


என் கவிதைகளை
உன்னிடம் காண்பிக்கும் போது நீ சொல்லும் சி...போ எனும் சொல்லில் என் கவிதை மோட்சம் அடையும். அதுவே எனக்கான என் கவிதைக்கான உன் பாராட்டாகவும் இருக்கும்..


நாம் எதிர்பார்க்கவில்லை சந்திப்போம் என்று ! நாம் எதிர்பார்க்கிறோம் பிரியப்போகிறோம் என்று ! நான் எதிர்பார்க்கிறேன் என்னை மறக்கமாட்டீர்கள் என்று ! தலைமுடி நரைத்தப் பிறகு தலைமுறை ஒன்று கடந்த பிறகு என்றோ ஒரு நாள் சந்தித்தால்... நன்றாய் பழகினோம் என்று நாம் பேசிய வார்த்தைகள் நினைவில் இருந்தால்... அன்று கூறுவோம் நம் நட்பு கடல் என்று ! காலம் நினைத்தால் மீண்டும் சந்திப்போம் சரித்திரம் படைத்தவர்களாக !

ஏடு எடுத்து படிச்சதில்லை என்ற
ஏக்கம் கொண்டதில்லை அன்பில் ஒரு வானவில்லை அழகாய் தந்த அக்காவினை என்ன சொல்லி கவி பாட வார்த்தை இல்லை நிஜமாக

சூரியகாந்தி சூரியனை மட்டும்
பார்க்கின்றது தன்னைப் பாராமல்! மயில் மழையில் மட்டும் ஆடுகிறதுகோடையில அல்ல குயில் வெய்யிலில் மட்டும் கூவுகிறது மழைக்காலத்தில் அல்ல… பயிர் நீலவானையே நோக்கி நிற்கும் நிலத்தையல்ல! தாய் தன் பிள்ளையை மட்டும் பார்க்கிறாள்


‎( வார்த்தைகள் மௌனிக்கிற நேரத்தில் கண்ணிர் பேசும்) உலகத்தில் மிக கொடுராமானது நட்பில் பிரிவு கடவுள் வந்து என்ன வேணும் என்னு என்கிட்ட கேட்ட நாம் நட்பு பிரிய முன் என் உயிர் பிரிய வேண்டும்

நீங்கள் என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான் இறந்துவிடுவேனோ தெரியாது -ஆனால் நான் இறக்கும் நிமிடத்திலும்உங்களை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன் என்ன செய்வேன் தோழர்களே உங்கள் நினைவுகளை இடுப்பில் சுமந்திருந்தால் இறக்கிவைத்திருபேன் --ஆனால் நான் என் இதயத்தில் அல்லவா சுமந்துவிட்டேன் இப்போது நான் என்ன செய்வேன்

No comments:

Post a Comment