JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Friday, March 18, 2011

எனது படைப்புக்களில் இதுவும் ஒன்று




என் நெஞ்சின் வலிகளை உணர முடியாத உன்னால் எனது எண்ணங்களை மட்டும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.

Thursday, March 17, 2011

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள்

உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது. 
1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு 




இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
2. எருமை உருவ கொறிணி (Rodent) 



கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும். உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 
3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை 



உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள் 



தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
5. மனிதனை விட பெரிய கடல் தேள் 



மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. 
இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள் 



அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். _

Wednesday, March 16, 2011

அடுத்தது கலிபோர்னியா?

சிபிக் பெருங்கடலை சூழ்ந்துள்ள அந்த குதிரைக் குளம்பு வடிவ பெரும் பகுதியை ”பசிபிக் ரிங் ஆப் பயர்” (Pacific Ring of Fire) என்கின்றார்கள். நிலநடுக்க அபாயங்களும் எரிமலை அபாயங்களும் நிறைந்த கடல் எல்லைப்பகுதி அது. உலகின் 75 சதவீத எரிமலைகள் இப்பகுதியில் தான் அமைந்துள்ளனவென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நெருப்பு வட்டத்தின் தென் கிழக்கு பகுதியில் சிலியும் தென் மேற்கு பகுதியில் நியூசிலாந்தும் வட மேற்கு பகுதியில் ஜப்பானும் அமைந்துள்ளது. இந்த மூன்று மூலைகளிலும் சமீப நாட்களில் தான் மாபெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. மிச்சமிருக்கும் நான்காவது மூலையான வட கிழக்கு பகுதியில் கலிபோர்னியா உள்ளது. இங்கு பேரழிவு தரும் பூமிஅதிர்ச்சி வருமா என்பது கேள்வி அல்ல, எப்போது வரும் என்பது தான் நிஜக் கேள்வி என்கின்றார்கள்.

டுத்தது சூப்பர் மூன். சில சமயங்களில் நிலவுப் பெண்னானவள் ஏதோ ஆசையில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. இந்த முறை கிட்டமாக 221,567 மைல்கள் வரைக்கும் வருகின்றாள். இதை சூப்பர் மூன் என்கின்றார்கள். 1955,1974,1992 மற்றும் 2005-லும் இப்படி நெருங்கி வந்திருக்கின்றாள். வந்த போதெல்லாம் பூமியில் பேரழிவு தான். 2005 சுப்பர் மூனுக்கு இருவார முன்பு இந்தோனேசிய பூகம்பமும் அதைத் தொடர்ந்து மாபெரும் சுனாமியும் ஆசியாவை விழுங்கியது. இந்த மாதம் 19-ம் தேதி சூப்பர் மூன் வரவிருக்க இரு வாரங்களுக்கு முன் ஜப்பானின் பாதி செத்திருக்கின்றது. ஆனால் சூப்பர் மூனுக்கும்-பூமிஅதிர்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை என விஞ்ஞானிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரனின் நகர்வுக்கேற்ப கடல் மட்டங்கள் ஏறி இறங்குவது சகஜம். இதை ஓதங்கள் அதாவது tides என்பார்கள். இதற்கு இந்தியாவில் அலிபா கடற்கோட்டை நீரில் மூழ்கி எழுவது அப்பட்ட சாட்சி.(படம்:Alibag, Maharashtra).



டுத்தது கதிர் வீச்சு பற்றி கொஞசம். ஜப்பானில் கசியும் கதிர் வீச்சு எந்நேரமும் கலிபோர்னியா கடற்கரை பக்கம் வந்து சேரலாம் என தகவல் கசிய அமெரிக்க மேற்கு கரை பகுதிகளில் ”பொட்டாசியம் அயோடைடு” பார்மசி ஸ்டோர்களில் விற்று தீர்ந்திருக்கின்றது. பீதியில் பெட்ரோல் விலை என்ன, யாரும் சீண்டாத பொட்டாசியம் அயோடைடுக்கே இப்போது தட்டுப்பாடு. கதிர்வீச்சை சீவெர்ட்ஸ் (Sieverts) என்ற அலகினால் அளக்கின்றனர்.அதாவது mSv-மில்லிசீவெர்ட்ஸ் (Milli sieverts). வருடத்துக்கு நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு கதிர்வீச்சு 3mSv/year. ஒரு முறை CT ஸ்கேன் செய்தாலே 3mSv உங்களுக்கு வந்து விடும். எக்ஸ்ரேயின் போது கதிர்வீச்சு கொஞ்சம் கம்மி 0.1mSv. ஆனால் ஜப்பானில் இப்போது வெளியாகும் அளவு 400mSv/hour. கொஞ்சம் டேஞ்சர் தான். மண்ணிலிருந்து நாம் பிரித்தெடுத்த மாணிக்கங்களே - சீசியம், அயோடின், ஸ்ட்ரோண்டியம், புளூட்டோனியம்-கள் விஷமாகின்றன.

நீங்களும் மூவி செய்யலாம்

உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன்என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.
http://www.youtube.com/watch?v=FL7yD-0pqZg


வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.
http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

இன்னொரு சுனாமி?



நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில்குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.

மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008
மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
1. http://www.paristamil.com/tamilnews/?p=15315
2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/
3. http://www.ajeevan.ch/content/view/6565/11/
30 Oct 2008
03:33 PM IST
மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.
http://en.wikipedia.org/wiki/Indian_Plate
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?
உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?
சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.
இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.

நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.


நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எந்த இடத்தில்
இருக்கிறது இதன் பணி என்ன என்பதை நம் கூகிள் மருத்துவ
நிபுனர்களுடன் சேர்ந்து புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது, நம்
உடலைப்பற்றிய அனைத்து தகவல்களையும் முப்பரிமானத்தில்
தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
திரைப்படத்தில் கிராபிக்ஸ்-ல் மட்டும் தான் மனித உடலை
பார்த்திருக்கிறோம் என்று எண்ணும் நமக்கு கூகிள் முப்பரிமானத்திலே
மனித உடலை காட்டி வியக்க வைக்கிறது. தலை முதல் கால் பாதம்
நம் உடலில் எந்த இடத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ
அதை சொடுக்கினால் போதும் உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த
பகுதியின் தகவல்களை நமக்கு காட்டுகிறது. ஆய்வகத்தில் சென்று
தான் மனித உடலின் எலும்புக்கூடு -ஐ பார்த்திருக்கிறோம் என்றும்
சொல்லும் நமக்கு கூகிள் இணையம் மூலம் மனித உடலை
முப்பரிமானத்தில் காட்டுவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இணையதள முகவரி : http://bodybrowser.googlelabs.com/body.html
புகைப்பிடிப்பதால் நம் உடலில் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து
காட்டினால் அதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து பல நபர்கள்
திருந்துவார்கள் என்பது நம் எண்ணம். மருத்துவ துறையில்
இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் நம் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
                                                        சிந்தனை
                   மனதின் வெளிப்பாடு தான் நம் முகம் , நல்ல
       எண்ணங்களையே எப்போதும் எண்ணுங்கள்.



பெயர் : தாதாசாஹெப் பால்கே,
மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.வருடைய நினைவாக தாதாசாஹெப்பால்கே விருது நிறுவப்பட்டது.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.


ஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்
நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ
பாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
யூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று
வித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை
யூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே
என்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்
ஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு
உதவ ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி :  http://tubeoke.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் பாடலின் பெயர் அல்லது இசையமைப்பாளரின்
பெயர் கொடுத்து தேட வேண்டியது தான், உடனடியாக நாம்
கொடுத்த தேடலுக்கு பொருத்தமான வீடியோ வரும் இதை
சொடுக்கி வீடியோ பாடலுடன் லிரிக்ஸ்-ம் சேர்ந்து வரும். சில
ஆங்கில வீடியோ பாடல்களின் லிரிக்ஸ் தேடும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.