JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Friday, August 26, 2011


உன்னை அன்று
பார்க்காது இருந்திருந்தால்
உன்னோடு அப்போது
பேசாது விட்டிருந்தால்
எம் உள்ளங்கள் இடம் மாற
இறுமாப்புச்செய்திருந்தால்
உணர்வுகள் ஒன்றையொன்று
புரியாது போயிருந்தால்
பார்வைகளால் பாசமதை
பரிமாற மறுத்திருந்தால்
காமன் கணைகள்அவை
வலுவிழந்து வீழ்ந்திருக்கும்
காதலர் தினமேஎன்றும்
களையிழந்து போயிருக்கும்
கண்களுக்குள் எம்காதல்
கருச்சிதைவு அடைந்திருக்கும் 
காலமெல்லாம் கண்ணீர்தான்
காவியமாய் ஆயிருக்கும் 



                                                 என்றும்அன்புடன்+++**Santhosh**+++
எனக்கு விக்கல் வரும் போது
நீ என்னை நினைப்பதாய் நினைக்கிறேன்,
தனிமை சிரிப்பு, தனிமை பொலம்பல் என
தினமொரு நாடகம் இனிமையாய் அரகேற்றினேன்,
உன் நினைவுகளை நினைக்கையில்
திறந்தவாய்  மூடாமல் இருக்கிறேன்,
நீ அணியும் ஆடைகளை என்
மேனி கொண்டு நெய்கிறேன்,
உன் மெத்தை மடி சாய்கிறேன் ,
வெக்கத்தில் உன் இமை கொடுக்கும் தாளத்திற்கு
இதயம் பக்கத்தில் பாடல் வடிக்கிறேன்,
என் உதடுகளால் உன் மேனியை நகல் எடுக்கிறேன்,
என் விழிகளிலே  அதை மாட்டி வைக்கிறேன்,
உன்னை தள்ளிவைத்தே ரசிக்கிறேன்,
மனதை கள்ளிச்செடியில் புதைக்கிறேன்,
உன்னுடன் பேசிய வார்த்தைகளை சேகரிக்கிறேன்,
நீ கேட்கும் பாடல்களை ரசிக்கிறேன்,
மடல் ஒன்றை எடுக்கிறேன்,
ஊடல் கொஞ்சத்தை சேர்க்கிறேன்,
விளையாடல் மஞ்சத்தில் கலக்கிறேன்,
தேடல் தீரும் வரை தொடர்வதற்கு....

                                                        என்றும்அன்புடன்+++**Santhosh**+++

Wednesday, July 13, 2011

ஏ.ஆர்.ராக்மன் இசையும் என்னை கவாந்த பாடல்கள்

 அரவிந்த் சாமியின் பாடங்கள் பொதுவாக யாவரையும் கவர்ந்தனவே எனினும் ஏ.ஆர்.ராக்மன்  பாடல்கள் திறம்பட அமைந்தாதற்கான காரணம்  இவரா

Wednesday, July 6, 2011

நீ நேசிக்க மறக்கும் என் இதயம் வீதியில்
உன்னை நேசித்ததைப்போல

 எதையும் நேசிக்கவில்லை
நேசிப்பவை எல்லாம்

உன்னைப்போல இல்லை
என்னை நேசிக்கும்

எதையும் நேசிக்கவில்லை
நேசிக்கும் மனமும் என்னிடம் இல்லை

Tuesday, July 5, 2011

உன் புகழ் எழுத - என்
பேனா அழுகிறது - அச்சமாம்
அதற்கு இறப்பை எண்ணி
எப்படி புரிய வைப்பேன்
அதைப்போல பிறர் புகழ் பாட
வாழ்ந்து கொண்டே இறந்தவள் - ஆனால்
அச்சம் கொள்ளாதவள் நீ என்பதை
பட்டப்படிப்பு படிக்காதவள் -என்
பட்டம் வாங்க பாடு பட்டாயே
அன்பு - கருணை - அரவணைப்பு
என் வாழ்வு மொத்தத்தின் இருப்பிடம்
உன் முகவரி தானே
சிந்திய வியர்வைக்கு
புன்னகையை முகத்திலும்
வேதனையை அகத்திலும் வைத்து
எல்லோர் உள்ளங்களிலும் - புன்னகையை
பரிசளித்தவள் நீ தானே
உன் வாழ்க்கை உன் கையில்
உணர்ந்து நீயும் வாழ்ந்திடு
நாளைய ஒரு ஏடு உன்
புகழ் பாடும் என்று
சொன்னவள் நீ தானே
உன் வாழ்க்கையை திறம்பட
வாழ்ந்து உன் பிறப்பால்
எமக்கு வாழ்வை கொடுத்தவள் நீ தானே
அழுதல் பிடிக்காது உனக்கு 
இருப்பினும் தெரியாமல் போனது 

அடக்குகிறேன் உள்மனதில்
எரிமலைக்குழம்பை ஒரு நாள் வெடிக்கும்
அன்றாவது பதில் சொல் என் வினாவுக்கு
உன்னை நேசிப்பது என்றும் குறையாது
எம் கண்ணீர் என்றும் வற்றாது .
என்றும் உன் அன்புடன்
வாழும் ஜீவன் இந்த இதயம்..

என் கண்ணீரை துடைக்கும் கரங்களாய் நீ வர வேண்டாம்
ஆறுதல் மொழி பேச என்னருகில் நீ வெண்டாம்
துக்கம் மறந்து தோள் சாயும்
தோள்களாய் நீ வர வேண்டாம்
நெஞ்சை வதைக்கும் நினைவுகளாய்
நீ வர வேண்டாம்
என் கல்லறையில் கால் தடம் பதித்து விட்டு போ
என் நேசத்தின் ஆயுள் நீளும்
பிரிந்த பின் என் பாசம்
உனக்கு புரியும்


நான் இந்த உலகை விட்டு போகும் காலம்
நெருங்கி விட்டது
நான் போன பின் எனக்காக
என் உறவுக்காக என் கவிதையை பர்த்து
ஒரு துளி கண்ணீர் விட்டு விடு
உன்  கண்கள்
நடைப்பழகாத இரு குழந்தைகள்
என்னை காணாத
அந்த ஒரு நிமிடம்..

என்னுள் இருக்கும்
உன்னோடு சேர்ந்து மிதந்து
போகிறேன் மேகமாய்..

என்னுடன் நான் உணர்த்த
மாற்றங்கள் உன்னால் அன்பே..
உன்னுடன் என் இதயம்..
உன் உறவு எனக்கு உயிர்
உன் உறவு பிரிந்தால்
என் உயிர் பிரியும் உன் மடியில்..

காவிய பெண்ணே..
புரிந்துக் கொள் என்
உறவு ஒரு முறை..

உறவுகள் சொல்ல பலர்
இருந்தாலும் என் உணர்வை
புரிந்துக் கொள்ள
நீ மட்டும