JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Wednesday, June 29, 2011

சந்தோஷம் எல்லோருக்கும் வரும்
வசந்தம் வாசவ் வரை வந்தும் உள்ளே வரவில்லை
எனக்குள்ளேயும் வரவில்லை...
கைக்கிட்டாதவை கணக்கில் இல்லை
கை சேர்ந்தது எதுவும் நிலை இல்லை
தோல்விகள் எதும் புதிது இல்லை
தோற்பதில் பயமும் இல்லை...
நம்பிக்கை மட்டும் மனதில் கொண்டு
நடமாடும் ஜீவன் நான்
காலம் பதில் சொல்லும் காத்திருப்பதன் அர்த்தத்தை மரணத்திற்கு............

Tuesday, June 28, 2011

பாசத்துக்காய் ஏங்கும் நெஞ்சம்
உயிர் மட்டும் இருக்க
உணர்வுகள் செத்துப்போயின...


கதறி ஆழ 
துடிக்குது மனது
கண்ணீர் மட்டும்
வரவில்லை...


கனவிலும் நினைக்காத நரகம்
இந்த தனிமை
தனிமையில்
சந்தோஷமாய் இருந்தேன்
சிலகாலம்.........


இன்று தனிமையின்
 வெறுமை சுடுகிறது.
என் உள்ளத்தை....


இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தை நோக்கி
என் கரம்
ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்


தலை கோதி வறுட உன்கரம் வேண்டும்
தோள் சாய உன் தோள் கொடு 
சிறிது நேரம் என் துக்கம் மறந்து
துங்கி கொள்கிறேன்


உன் அன்பால் மட்டுமே
உயிர் வாழ்கிறேன்
உறவே என்றும்
எனக்கு மட்டுமே உறவாய் இரு
கடந்த காலம் கசப்பாய் கடந்து விட
நிகழ்காலம் நெருப்பாய் சுட்டு விட
எதிர்காலம் கவலையில் கலங்கி விட
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட


ஆதரவாய் ஆறுதல் வார்த்தைகள் பேசி
என் கிறுக்கல்களையும் ரசித்து
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து 
என் துயர் மாறா செய்யும் என் உறவே..


என் நட்பு தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே
உன் நட்பில் துயர் மறைக்கிறேன்
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்


துயர் துடைக்கும் உன் கரங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்
என் உறவே
எனக்கு மட்டும்
உன் அன்பை தந்து விடு
பாசத்தை பகிர்ந்து தருவது அன்னையாக
 மட்டுமே இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேண்டும்..........
கடந்த காலம் கசப்பாய் கடந்து விட
நிகழ்காலம் நெருப்பாய் சுட்டு விட
எதிர்காலம் கவலையில் கலங்கி விட
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட


ஆதரவாய் ஆறுதல் வார்த்தைகள் பேசி
என் கிறுக்கல்களையும் ரசித்து
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து 
என் துயர் மாறா செய்யும் என் உறவே..


என் நட்பு தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே
உன் நட்பில் துயர் மறைக்கிறேன்
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்


துயர் துடைக்கும் உன் கரங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்
என் உறவே
எனக்கு மட்டும்
உன் அன்பை தந்து விடு
பாசத்தை பகிர்ந்து தருவது அன்னையாக
 மட்டுமே இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேண்டும்..........

Sunday, June 26, 2011

என்னுள் ஏமாற்றம்





உன்னுள் மாற்றம்
என்னுள் ஏமாற்றம்
இன்றும்ஓரே மனநிலையில் நான்
நீ மட்டும் ஏன் மாறி விட்டாய்???

பாசத்திற்கு அளவில்லைஅன்று
பாசமே இல்லாததை போல் உணர்கிறேன் 
இன்று...
தனிமையில் தவிப்பதாய் ஓரு கலக்கம்.
தினமும் துங்க வைப்பாய் உன் sms இல்
துயில் எழுப்ப மறப்பதும் இல்லை
என்னுடனே இருக்க துடிப்பாய் பிரிய மனமின்றி...
இன்று???

நேரம் இல்லையோ என்னை நினைக்க கூட
தினமும் பிரிகிறேன் உன் அன்புக்கான ஏமாற்றத்தோடு..
அமைதியாய் இருந்தேன்என்னுள் அமைதி இல்லை..
பேசுவதைக்கூட குறைத்துமீண்டும் பாசத்தை தேடி
உள்ளம் பரி தவிக்குது உன்னால்...

எனக்கே எனக்கு என்றுஉன்னை 
நினைத்தாதுதான் என் பிழையோ?
யாரிடமும் விட்டுக்கொடுக்கமனம் இல்லை...
ஏன்னை மட்டும் ஏன் விட்டாய் ஏன்?
பிரிவு எல்லோருக்கும் வரும்...
பின்னாளில் பிரியப்போவதற்கு இன்னாளில் ஓத்திகை ஏன்?????.....

Monday, April 18, 2011

அன்பின் மூன்று வகைகள்

அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்!அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம்ஆகிவிட முடியும்.அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது.
.
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (1யோவா 4:8) என்று அன்பின்அதிமுக்கியத்துவத்தை வேதம் நமக்கு தெளிவாக விளக்கியுள்ள போதிலும்,
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத். 24:12)என்ற வேத வார்த்தைப்படி இந்நாட்களில் அனேக மனிதர்களிடம் வெகு வேகமாக குறைந்து கொண்டே போகும் அன்பின் வகைகளைஅறிய தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்உலகில் காணப்படும் அன்பை பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம்.


1. மிருக அன்பு :





மிருகம் என்பது பகுத்தறிவு இல்லாத உயிரினமாக இருக்கின்ற போதிலும் அவைகளிடத்திலும் அன்பு உண்டு.அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட ஒருபடி அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும்அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும்
இல்லாமல் அது சுகமாய் தங்கி இருக்கும் இடத்தில் அந்நியர் யாரும் வந்துவிட்டால் உடனே ஒரு சத்தமிட்டு தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதொடு கடும் கோபத்துடன் எதிராளி மீது மோதும் தன்மையுடையது இது போன்ற அன்பு இன்று அனேக மக்களிடமும் காணப்படுவதுதான் மிகவும் வேதனையான விஷயம். தலைவிரித்தாடும் சுயநலம், 
எல்லாவற்றிலுமே ஏதாவது ஆதாயத்தை எதிர்பார்த்து செய்யும் நிலைமை, யார் நஷ்டம் அடைகிறார், அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை செய்யாமல் தானும் தன் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும்யார் எப்படி போனால் நமக்கென்ன என்ற நோக்கோடு இன்று மனித கூட்டம் செயல்படுகிறது. உயிர்காக்கும் மருந்திலிருந்து உணவு பொருள்கள் வரை எல்லாவற்றிலும் கலப்படம், தெரு பொறுக்கும் கார்பரேசன்துடப்பத்தில் 
இருத்து மனிதனின் கிட்னி வரை எங்கும் திருட்டு. இவை எல்லாம் மிருக அன்பை விட கேவலமான அன்பு மனிதனிடம் புகுந்து விட்டதால் வந்த அலங்கோலங்கள். .


2. மனித அன்பு:-

மனித அன்பு என்பது மாறும் அன்பாகும். இன்று "நீ இல்லாமல் வாழவே முடியாது" 
என்று சொல்லும் அதே வாய் நாளை "நீ இருந்தால் என்னால் வாழவே முடியாது" 
என்று மாறி பேசும். இன்று "உன்னை போல் நல்லவன் இல்லை" என்று சொல்லும்
வாய் நாளை "உன்னை போல ஒரு கெட்டவனை நான் பார்த்ததே இல்லை" என்று 
சொல்லும் மனித அன்பு நம்பகத்தன்மை அற்றது ஆகும்
மேலும் இந்த அன்பு பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை
 கொண்டது.ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் 
அடிப்படையிலும் வயது மட்டும் இருக்கும் சூழ்நிலை பதவிக்கு தகுந்தார்போலவும்
 நிறம் மாறும்தன்மையுள்ளது.ஞாயிற்று கிழமை இயேசு எருசலேம் உள்ளே
 நுழையும் போது அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து
 "உன்னதத்தில் இருந்து வந்தவருக்கு மகிமை"
 என்று பாட்டு பாடிய மக்களில் பலர் வியாழக்கிழமைக்குள் "அவரை அகற்றும்" "
சிலுவையில் அறையும்" என்று சத்தம்போடும் அளவுக்கு மாறிவிட்டார்கள் என்றால் 
பாருங்களேன். காரணம் அவர்கள் இயேசுவை புகழ்ந்தால் தனக்கும் அவர்போல் அடி 
உதை கிடைத்து விடும் என்ற பயம்தான். ஆளை பார்த்தல் ஒரு அன்பு ஆளை பார்க்காவிட்டால் ஒரு அன்பு, தனியாக இருக்கும் போது ஒரு அன்பு கூட்டமாக இருக்கும் போது ஒரு அன்பு, பணம் இருந்தால் ஒருஅன்பு பணம் இல்லாவிட்டால் ஒரு அன்பு அப்பப்பா எத்தனை விதமான மனித அன்புகள்!உலக மனிதர்களின் பச்சோந்திதனமான அன்பு எப்பொழுது எப்படி மாறும் என்பதை தனத்தையும் விளக்கி சொல்ல முடியவே முடியாது! . ஆகவேதான் "உங்கள் அன்பு மாயமற்றதாய் இருப்பதாக" என்று பவுலடியார் எச்சரித்துள்ளார்


3. தெய்வீக அன்பு:



ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான 
அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவா 15:!3) என்று ஆண்டவராகிய இயேசு 
சொன்ன வார்த்தைகளில் வரும் உயர்ந்த அன்பினையே தெய்வீக அன்பு என்றும்
 நேசம் என்றும் சொல்ல முடியும்.

தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக 
இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் 
எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல்
 போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு 
வைக்கும் நிலையான அன்பே தெய்வீக அன்பு.

.
இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு 
கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும்
மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு
எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள்
உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. 
அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி அன்பை பற்றி 1கொரிந்தியர் 13ம் அதிகாரம் மிக
அருமையாக விளக்குகிறது.அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது,இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில்
சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.நரகம் என்று ஒரு கொடிய இடம் இருக்கிறது என்பதை நேரடியாக பார்த்த தெய்வீக மனிதர்கள்,
எப்படியாவது இந்த ஜனங்களை அங்கு போவதிலிருந்து மீட்க வேண்டும் எந்த ஆதங்கத்தில் சொந்த நாட்டை, நல்லவாழ்க்கையை துறந்து காடு மேடு என்று அலைந்து இயேசுவை அறிவிக்கும் அந்த அன்பை என்னே சொல்வது.

நல்ல வாழ்க்கையை துறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய மக்களுக்காக உழைத்து மரித்த "கார்மைக்கேல் அம்மையார்" "மதர்தெரசா", ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததர்க்காக நெருப்பால் கொளுத்தப்பட்ட வில்லியம், மார்டின் லூதர் போன்ற தேவே மனிதர்களிடமே இந்த அன்பை கான முடியும். யாரென்றே தெரியாதவருக்காக கண்ணீர் விட்டு கதறி மன்றாடவும்,
பிறருக்காக தன்னையே கொடுக்கவும் கூடிய அன்பு கிறிஸ்தவத்திலன்றி வேறு எந்த மதத்திலும் கிடையாது. ஏனென்றால் அன்புக்கு இலக்கணமான ஆண்டவர் இயேசு என்னும் ஜீவனுள்ள உண்மை தேவன் இங்கு தான் இருக்கிறார்! கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்" "
கருணை மறந்து வாழும் மக்கள் கடவுளை தேடி எங்கு அலைந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியாது"

Monday, April 11, 2011

என் கவிதைக்கான உன் பாராட்டு

                                                                 



எது காதல்இதுவரை இன்னும் புரியவில்லை.
எது காதல் உன் கண்களுக்குள் உலகத்தை
பார்த்திருக்க வேண்டும் என்ற போதைதான் காதலா
நீ மெதுவாக சிரிக்கும் அந்தபுன்னகைக்காக ஏங்கி ஏங்கிக் கிடப்பதுதான் காதலா

கடிகாரம் மறந்து காலநேரம் துறந்து
உன்னுடன் கதைத்துக்கொண்டே கரைவதுதான் காதலா
உனக்குத் தரும் சின்னச்சின்னப்பரிசுகளிலும்,
நீ எனக்கு கொடுக்கும் அன்புப் பரிசுகளிலும் உறைந்து கிடக்கிறதா காதல்

                                                   அப்படியாயின் எதுதான் காதல்..
                             என்னைச் செதுக்கி செதுக்கி ஒரு     மனிதனாய் மாற்றுகிறாயே
         அதுதான் காதல் எனக்கு ஒரு போதிமரமாய் இன்னுமொரு                                      கீதை என நான் தடுமாறும் குருசேத்திரங்களில்   
என் தலைகோதி எனக்கு நீசொல்லும் அறிவுரைகளில்தான் காதல்
நிரம்பிஇருப்பதாய் எனக்குபடுகிறது.



சொற்ப நொடியிலே
சொற்பனம் கண்டேன் அந்த நொடியிலே
சோகம் தந்தாய் சொந்த வரியில்
சோகம் தீர்த்தேன் சொல்ல முடியாமல்
ராத்திரியில் துடித்தேன் விலகி விலகிப் போகின்றது
உணர்வுகள் விலக்கியும் போகாது நம்

நினைவுகள். பிளவுகள் ஒன்றாய்
இணைகையிலே பிரிவுகள் என்றும்
துயரமில்லை மின்னல் ஒளியாய்
வருவதெல்லாம் வெண்ணிலவாய் நிலைப்பதில்லை.
பிரியமான வேளையிலே

பிரிவுகள் வந்து சேர்கின்றது பிரியத்தான் முடியாமல்
பிரிகின்றேன் உன்னை ...எங்கு வாழ்ந்தாலும்
எப்படி வாழ்ந்தாலும் வாழ்ந்தால் உன்னோடுதானென்று திடம்கொண்டிருந்தேன் திடமாய்
அறிந்திருக்கவில்லை திடமாய் பிரிவோமென்று



சின்ன சின்ன ஆசைகளைஎன்னுள் வளர்த்து உன்னோடு இருக்கும்போது அவைகளை சிறகுகளாக விரித்து பறக்கலாமென்று காத்திருந்தேன் ஆனால் நீயில்லாத சிறகுகள் விரிக்காமல் சுருங்கி என் மீது சுமையாக என்னால் தாங்காமல் என்னுடல் இளைத்து கண்ணீரை வியர்நீராக சொரிந்து ஏது வாழ்க்கை இதுதான் வாழ்க்கையா என்றுனர்வில்லாமல் ஐடமாய் எங்கே என் வாழ்க்கையென்று தேடுகிறேன்...

முதல் நாளில் நீமுதல் நாளில் நீ பேசியமுதல் வார்த்தை இரண்டாம் நாளில் உன்னை என் இதயம் தேடியதை இறுதியாய் என்னை விட்டு போய் விடு என்றதை எதையும் மறவேன் அன்பே மறக்கவும் முடியாதுவாழ்கை பயணத்தில் வாழ்கை பயணத்தில் நான் இளைப்பற எனக்காக கொஞ்ச நாள் கடவுள் அனுப்பிய ஒருத்தன் தான் நீ உன் வேல முடிஞ்சு நீ போய்ட்ட வாழ்கை முழுதும் அழுவது நான் கடவுளுக்கென்ன இப்போ உன் நினைவு என் அருகில் இருந்து என்னை பாக்கிறது


என் கவிதைகளை
உன்னிடம் காண்பிக்கும் போது நீ சொல்லும் சி...போ எனும் சொல்லில் என் கவிதை மோட்சம் அடையும். அதுவே எனக்கான என் கவிதைக்கான உன் பாராட்டாகவும் இருக்கும்..


நாம் எதிர்பார்க்கவில்லை சந்திப்போம் என்று ! நாம் எதிர்பார்க்கிறோம் பிரியப்போகிறோம் என்று ! நான் எதிர்பார்க்கிறேன் என்னை மறக்கமாட்டீர்கள் என்று ! தலைமுடி நரைத்தப் பிறகு தலைமுறை ஒன்று கடந்த பிறகு என்றோ ஒரு நாள் சந்தித்தால்... நன்றாய் பழகினோம் என்று நாம் பேசிய வார்த்தைகள் நினைவில் இருந்தால்... அன்று கூறுவோம் நம் நட்பு கடல் என்று ! காலம் நினைத்தால் மீண்டும் சந்திப்போம் சரித்திரம் படைத்தவர்களாக !

ஏடு எடுத்து படிச்சதில்லை என்ற
ஏக்கம் கொண்டதில்லை அன்பில் ஒரு வானவில்லை அழகாய் தந்த அக்காவினை என்ன சொல்லி கவி பாட வார்த்தை இல்லை நிஜமாக

சூரியகாந்தி சூரியனை மட்டும்
பார்க்கின்றது தன்னைப் பாராமல்! மயில் மழையில் மட்டும் ஆடுகிறதுகோடையில அல்ல குயில் வெய்யிலில் மட்டும் கூவுகிறது மழைக்காலத்தில் அல்ல… பயிர் நீலவானையே நோக்கி நிற்கும் நிலத்தையல்ல! தாய் தன் பிள்ளையை மட்டும் பார்க்கிறாள்


‎( வார்த்தைகள் மௌனிக்கிற நேரத்தில் கண்ணிர் பேசும்) உலகத்தில் மிக கொடுராமானது நட்பில் பிரிவு கடவுள் வந்து என்ன வேணும் என்னு என்கிட்ட கேட்ட நாம் நட்பு பிரிய முன் என் உயிர் பிரிய வேண்டும்

நீங்கள் என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான் இறந்துவிடுவேனோ தெரியாது -ஆனால் நான் இறக்கும் நிமிடத்திலும்உங்களை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன் என்ன செய்வேன் தோழர்களே உங்கள் நினைவுகளை இடுப்பில் சுமந்திருந்தால் இறக்கிவைத்திருபேன் --ஆனால் நான் என் இதயத்தில் அல்லவா சுமந்துவிட்டேன் இப்போது நான் என்ன செய்வேன்